கேரளாவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழையோரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக நாளையும் நாளை மறுநாளும் கேரளாவில் 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து பாலக்காடு, திருச்சூர், திருவனந்தபுரம், இடுக்கி, பத்தினம்திட்டா, கோட்டையம், மலப்புரம் மற்றும் வயக்காடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்கும்படி மாநில வருவாய் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.