Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் செப்-1 பள்ளிகள் திறப்பு…. மதிய உணவு, இலவச பேருந்து கிடையாது…. முக்கிய அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக கல்வித்துறை இயக்குனர் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி பள்ளிகளில் மாணவர் வருகைக்காக ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறந்து முன்னேற்பாடுகளை செய்யலாம். 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் வகுப்புகள் செயல்படும்.

10, 12ஆம் வகுப்புகளுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் செயல்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பேருந்துகள் இயக்கப்படாது.   ஆட்சியர் அனுமதித்த பிறகு இயக்கப்படும். அறிகுறி உள்ள குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பக்கூடாது. அதேபோல வீட்டில் யாருக்கும் தொற்று இருந்தாலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக் கூடாது. குழந்தைகளை சமூக இடைவெளியுடன் அமரவைக்க முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.

பள்ளியில் நுழையும் முன் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். அடுத்த உத்தரவு வரும் வரை மதிய உணவு வழங்கப்படாது. வருகை பதிவேடு கட்டாயம் கிடையாது. வராதவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுக்க வேண்டும். தினமும் உடல் வெப்பநிலை பரிசோதித்து பள்ளிக்குள்  அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |