Categories
தேசிய செய்திகள்

இங்க தான் அதிகமா இருக்கு…. உடனே கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துங்க…. மத்திய சுகாதாரத்துறை…!!!

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் கேரள மாநிலத்தில் மட்டும் தொற்று குறைந்தபாடில்லை. முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட கேரள அரசு இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் கேரள மாநில தலைமைச் செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அதில் இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. நாட்டிலேயே கொரோனா பாதிப்புகளில் கேரளா முதலிடத்தில் உள்ளது கவலையளிக்கிறது. ஓணம் பண்டிகைக்குப் பிறகுதான் இந்த பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களில் எண்ணிக்கையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். பாதிப்பு அதிகமுள்ள இடங்களை கண்டுபிடித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |