Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் செய்ய வேண்டும்…. பணியாளர்கள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் பாதுகாவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பாக பல கோரிக்கைகளை முன் வைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கியுள்ளார். பின்னர் அகில இந்திய தொழிற்சங்க மைய மாநில செயலாளர் கோவிந்தராஜன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளார். அதன்பின் மாவட்டச் செயலாளரான முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் போராட்டத்தை விளக்கி பேசியுள்ளனர்.

இதனையடுத்து சம வேலைக்கு சம ஊதியம் என்ற விதிகளின்படி ஊதியம் வழங்க வேண்டும் எனவும், தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் உடனே வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். பிறகு ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்யுமாறு மற்றும் ஓவர் டைம் வேலைக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்குமாறு அவர்கள் கூறியுள்ளனர். இதில் தொழிலாளர் நல சட்டங்களை முறைப்படி அமல்படுத்த வேண்டும் எனவும், தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காப்பீடு திட்டம் அமுல்படுத்த வேண்டுமென அவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்குப் பிறகு கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த மருத்துவ அலுவலர் காந்தி, மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து தங்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் பார்வைக்கு எடுத்து சொல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இதனால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |