சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் 8வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவாதத்தின்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும், அவை முன்னவர் துரைமுருகனுக்கும் இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையை விட்டு வெளியேறினார்கள்.
அப்போது ஓ பன்னீர்செல்வம் குறித்தும், அவருடைய மகன் குறித்தும் துரைமுருகன் ஒரு கருத்து தெரிவித்தார். இதன்பின்னர் சிறிதுநேரத்தில் வெளிநடப்பு செய்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அவைக்கு வந்தனர். அப்போது துரைமுருகன் எழுந்து ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பற்றி நான் பேசிய கருத்தை திரும்பப் பெறுகிறேன். அதை அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுங்கள் என்று கூறினார். அப்போது பன்னீர்செல்வம், “நதியினில் வெள்ளம். கரையினில் நெருப்பு. இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு. இதுதான் என் தற்போதைய நிலைமை” என்ற பாடலை பாடினார்.