உடற்பயிற்சிக்கு சொல்லாததை கண்டித்ததால் திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெத்தனபள்ளி பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற தனலட்சுமி உடல் எடையை குறைப்பதற்காக பயிற்சிக்கு சென்று வந்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக தனலட்சுமி பயிற்சிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த தனலட்சுமி தனது உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் வலி தாங்க முடியாமல் அலறி சத்தம் போட்ட தனலட்சுமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.