Categories
தேசிய செய்திகள்

ரூ. 10 லட்சம் போச்சு…. பப்ஜி-ல் ரூ.10 லட்சத்தை இழந்துவிட்டு… வீட்டைவிட்டு ஓடிய சிறுவன்…!!!

பப்ஜி கேம் விளையாடி தனது தாயின் வங்கி கணக்கில் இருந்து பத்து லட்சம் ரூபாயை 16 வயது சிறுவன் இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை யோகேஸ்வரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த 25ஆம் தேதி திடீரென்று காணாமல் போனான். இதனால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி பார்த்துவிட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி போலீசார் பெற்றோரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் கடந்த மாதம் முதல் சிறுவன் தடைசெய்யப்பட்ட பஜ்ஜி கேமை செல்போனில் விளையாடி வந்துள்ளார். இந்த விளையாட்டிற்காக தனது தாயின் வங்கி கணக்கில் உள்ள 10 லட்சம் பணத்தை அதில் கட்டி இழந்துள்ளார்.

இதைப் பற்றி அறிந்த சிறுவனின் பெற்றோர்கள் அவரை கண்டித்துள்ளனர். இதனால் சிறுவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு ஓடி சென்றுள்ளான். போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியபோது, அந்தேரி கிழக்கு மகாகாளி குகை அருகே சிறுவன் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்று அவரை மீட்ட போலீசார், அவனுக்கு கவுன்சிலிங் கொடுத்து பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |