தமிழகத்தில் கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.8 கோடி செலவில் 50 சிறப்பு அங்காடிகள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பொருட்களை சந்தைப்படுத்த சிறப்பு அங்காடிகள் அமைக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னிர்செல்வம் அறிவித்தார். கரூர், நாகை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ரூ.30 கோடியில் அரசு வேளாண்மைக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
Categories