மேகதாது அணை விவகாரத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும் இறுதிவரை போராடினால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கட்சி வித்தியாசம் இன்றி தற்போது எப்படி ஒரு நிலையில் இருக்கின்றோமோ, இதுபோன்ற இறுதி வரை நாம் நின்றால் நிச்சயமாக வெற்றி பெறுவோம். காவிரி பிரச்சனையில் நாம் ஒன்றுபட்டு நின்றால் எந்த சக்தியும் நம்மை வீழ்த்த முடியாது. கர்நாடக முதல்வர் நீதி தவற மாட்டார் என்ற நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மேலும் மறுக்க வேண்டியதை மறுப்போம், வாதாட வேண்டியதை வாதாடுவோம் என்று கூறியுள்ளார்.
Categories