Categories
மாநில செய்திகள்

கலைஞர் நூலகத்துக்கு புத்தகம் பரிசளிப்போம்…. பென்னிகுவிக் பேரன், பேத்தி…..!!!

மதுரையில் 99 கோடி ரூபாய் மதிப்பில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 மாடி கட்டிடமாக கலைஞர் நினைவு நூலகம் அமைக்க மதுரை – நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது.முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குக் வாழ்ந்த இடத்தில் கலைஞர் நூலகம் கட்ட இருப்பதாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் பென்னிகுவிக் பேரன்கள் டயானா கிப் மற்றும் டாம் கிப் ஆகியோர், இந்த சர்ச்சை தேவையற்றது. இந்த நூலகம் கட்டுவதற்கு பென்னிகுவிக் குடும்பத்தார் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும் எங்கள் தாத்தா(பென்னிகுவிக்) இந்த பகுதியின் வளர்ச்சிகாக பாடுபட்டவர். மதுரையும் இந்த மொத்த பகுதியையும் அவர் மிகவும் விரும்பினார்.

இதன் வளார்ச்சிக்காவே பெரியாறு அணையை முழுமையான ஈடுபாட்டுடன் கட்டினார். இந்த நூலகம் அமைய வேண்டும். இதற்கு எங்கள் குடும்பம் முழுமையாக உறுதுணையாக இருக்கும் என்றும் இந்த கலைஞர் நூலகத்திற்கு நாங்கள் லண்டனில் இருந்து இயன்றால் புத்தகங்களை பரிசளிப்போம் என்றும் கூறினார்கள்.

Categories

Tech |