நடிகை திரிஷா சினிமாவிற்கு வருவதற்கு முன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவிற்கு சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் முன்னணி நடிகை திரிஷா. இப்படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்ததன் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வருகிறார்.
நடிகை திரிஷா தற்போது ராங்கி, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷா சினிமாவிற்கு வருவதற்கு முன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் பலரும் திரிஷாவா இது என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.