Categories
தேசிய செய்திகள்

சிசிடிவி கண்காணிப்பு கேமரா…. உலக அளவில் சென்னை 3 ஆம் இடம்…. டெல்லி முதலிடம்….!!!!

உலகிலேயே ஒரு சதுர மைலுக்கு அதிக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் கொண்ட நகரங்கள் பட்டியலில் டெல்லி  முதலிடத்தை பிடித்துள்ளது. இதில், சென்னை 3ம் இடத்தில் உள்ளது. போர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில், அதிக சிசிடிவி கேமராக்களை கொண்டுள்ளதாக டில்லி முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு ஒரு சதுர மைல் பரப்பில் 1,827 கேமராக்கள் உள்ளன.

அடுத்ததாக சதுர மைலுக்கு 1,138 கேமராக்களுடன் லண்டன் 2வது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் சென்னை 3வது இடத்தை பிடித்துள்ளது. சென்னையில் சதுர மைலுக்கு 610 கேமராக்கள் உள்ளன. அந்த வகையில் 194 கேமராக்களுடன் நியூயார்க் 14வது இடத்திலும், 157 கேமராக்களுடன் மும்பை 18வது இடத்திலும் உள்ளன.

Categories

Tech |