கடுமையான பனி மூட்டம் நிலவுவதால் காட்டு யானைகளை விரட்டும் பணி தாமதமாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் பொன்னூர் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது. இதனை விரட்டுவதற்காக முதுமலையில் இருந்து ஸ்ரீனிவாசன், பொம்மன், சுஜய் என்ற 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.
அங்கு அதிகமான பனிமூட்டம் இருப்பதால் காட்டு யானைகள் நிற்பது தெரியவில்லை. இதனால் அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதலாக விஜய் என்ற கும்கி யானையும் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் மழை, கடும் பனிமூட்டம் நிலவுவதால் காட்டு யானைகளை விரட்டும் பணி சற்று தாமதமாகியுள்ளது. எனவே 25-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் குழுக்களாக பிரிந்து காட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.