வட்டார வளர்ச்சி அலுவலரின் மகனை தாக்கிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள காஜாமலை பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலரான விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேசன் என்ற மகன் உள்ளார். இவர்களது வீட்டிற்கு அருகில் விஜயலட்சுமியின் தம்பியான சங்கீத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அக்காள் தம்பிக்கு இடையே ஏற்கனவே இடப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.
இதனை அடுத்து சரத்குமாருக்கும், வெங்கடேசனும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபத்தில் ரஞ்சித்குமார் வெங்கடேசனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சங்கீத் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.