பகத் பாசில் வில்லனாக நடிக்கும் புஷ்பா படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் பகத் பாசில். தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இவரது நடிப்பில் தமிழில் விக்ரம் எனும் திரைப்படமும், தெலுங்கில் புஷ்பா எனும் திரைப்படமும் உருவாகிவருகிறது.
இந்நிலையில் பஹத் பாசில் வில்லனாக நடிக்கும் புஷ்பா படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பஹத் பாசில் வெறித்தனமான லுக்கில் இருக்கும் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.