Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் புதிய மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து…. 2 பேர் படுகாயம்….!!!

மதுரை நத்தம் சாலையில் புதிய மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அந்தப் பாலம் சற்றுமுன் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பாலத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததால் கட்டுமான பணியாளர்களைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இடிபாடுகளில் யாராவது சிக்கி உள்ளார்களா என்ற மீட்பு குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Categories

Tech |