Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை ரிலீஸ் டேட்… கூடிய விரைவில் அறிவிக்க வாய்ப்பு…. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!

வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் கூடிய விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜீத் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடந்து வரும் நிலையில் இப்படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 3 ஆம் தேதியோடு முடிவடைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்த படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்த உடன் ஒரு ஸ்பெஷல் வீடியோவுடன் வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு வலிமையை படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |