Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்று கடும் ஊரடங்கு கட்டுப்பாடு…. கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. ஆனால் கோவை மாவட்டத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவை கிராஸ்கட் ரோடு, 100 அடி சாலை, காந்திபுரம் 5, 6, 7 ம் தெருக்கள்,ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலுார் சந்திப்பு ஆகிய தெருக்கள்,அவற்றுடன் தொடர்புடைய துணை தெருக்களில் கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கதடை விதிக்கப்படுகிறது.அனைத்து மால்களும் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது.

பொள்ளாச்சி மாட்டு சந்தை  இயங்க தடை விதிக்கப்படுகிறது. சுற்றுலா மையங்கள், அருங்காட்சியகங்கள், பூங்காக்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது.கோவை மாவட்டத்துக்குள் விமானம், ரயில், சாலை வழியாக வரும் அனைவரும், 72 மணி நேரத்துக்குள் எடுத்த கொரோனா பரிசோதனை நெகடிவ் சான்றுடன் அல்லது 2 டோஸ் தடுப்பூசி சான்றுடன் வரலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |