Categories
கிரிக்கெட் விளையாட்டு

தமிழ் என் தாய் மொழி.. தமிழனாய் வாழ்வது பெருமை… விமர்சித்த ரசிகருக்கு மித்தாலி ராஜ் பதிலடி..!!

தமிழ் என் தாய் மொழி.. நான் தமிழ் நன்றாக பேசுவேன்.. தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை என்று தன்னை விமர்சித்த ரசிகர் ஒருவருக்கு மித்தாலிராஜ் பதிலடி கொடுத்துள்ளார். 

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சச்சின் என அழைக்கப்படுவர் மித்தாலி ராஜ். 20 ஆண்டுகளாக இந்திய அணிக்காக தனது அயராத பங்களிப்பைத் அளித்துவருகிறார். இதன்மூலம், 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடும் ஒரே வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார் மித்தாலி. கடந்த சில நாட்களுக்கு முன் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில்  இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் விளையாடி 20 ஆண்டுகளை ள் நிறைவு செய்தார்.  இவரை பிசிசிஐ  கெளரவித்தது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் மித்தாலி ராஜிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Image

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் வாழ்த்து தெரிவித்தார். அதில், ஒரு அற்புதமான செயல்திறன். தென்னாப்பிரிக்கா பெண்களுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது மிக  சிறப்பு. மித்தாலி ராஜ்  சர்வதேச கிரிக்கெட்டில் வித்தியாசத்துடன் அணியை வழிநடத்துதல் மற்றும் அற்புதமாக 20 ஆண்டுகளை கடந்ததற்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டார்.

இந்த பதிவிற்கு மித்தாலிராஜ், என் வாழ்நாள் முழுவதும் பார்த்து வளர்ந்த  ஒரு நபரால் பாராட்டப்படுவது  மகிழ்ச்சியாக இருக்கிறது .. நன்றி சாம்பியன் என்று பதிவிட்டார்.

இந்த பதிவிற்கு சுகு என்ற நபர் ஒருவர், அவருக்கு தமிழ் தெரியாது. அவர், ஆங்கிலம் தெலுங்கு, இந்தி மொழியில் பேசுவார் என்று பதிவிட்டார்.

Image result for Also my dear sugu ,you constant criticism on each and every post of mine ,

இதனை கண்டு ஆத்திரமடைந்த மித்தாலிராஜ், தமிழ் என் தாய் மொழி.. நான் தமிழ் நன்றாக பேசுவேன்.. தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை.. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக நான் இந்தியனாக மிகவும் பெருமைப்படுகிறேன். “என் அன்பான சுகுவே, என்னுடைய ஒவ்வொரு இடுகையிலும் நீங்கள் தொடர்ந்து விமர்சிக்கிறீர்கள். நான் எப்படி, என்ன செய்ய வேண்டும் என்பதற்கான அன்றாட ஆலோசனை என்னைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது என பதிலடி கொடுத்துள்ளார்.

Categories

Tech |