Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏம்பா…!! இவ்வளோ நேரம் நிக்குற ….. உனக்கு கால் வலிக்காதா ? முக.ஸ்டாலின் நெகிழ்ச்சி …!!

நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து அம்பலம் பகுதியில் மு க ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் செய்து வருகிறார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து அம்பலம் பகுதியில் மு க ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் செய்து வருகின்றார். அதில் அவர் மகளிர் சுயஉதவிக் குழுக்களிடையே பேசும் போது , திமுக ஆட்சி காலத்தில் நான்   உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது மகளிர் சுயஉதவிக்குழு என்னுடைய துறையில் இருந்தது. அப்போது அவர்களின் குறையை கேட்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நாலு , அஞ்சு செல்வேன். அப்போது மகளிர் சுய உதவி குழு எல்லாம் ஒன்று திரட்டி அவர்களுக்கு தொழில் தொடங்க கடன் உதவி , தொழில் செய்வதற்கு என்னென்ன தேவையோ அதனை நான் செஞ்சு கொடுத்துள்ளேன்.

பொதுவாக கடன் மானியத்துடன் கடன் வழங்கும் அரசியல் கட்சி நிகழ்ச்சி நடக்கும் போது  அங்கு வந்துள்ள 100 , 200 பேருக்கும் நலத்திட்ட உதவி கொடுக்கணும். ஆனா இப்போது சும்மா ஒரு 5 பேருக்கு கொடுத்து விட்டு போட்டோக்கு போஸ் கொடுத்து விட்டு அலுவலகத்தில் வந்து வாங்கிக்கோங்க என்று சொல்லிடு போயிருதாங்க. நீங்க அந்த வாங்க போதும் போதும்னு ஆகிரும்.ஆனால் திமுக ஆட்சி காலத்தில் 5000 பேர் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் நானே நின்று கொடுத்து முடிப்பேன். சுமார் 5 மணி நேரம் நின்னு மகளிர் சுயஉதவிக் குழுவை மதித்துக் ஒருவரையும் விடாமல் கொடுப்போம்.

என்னக்கு நன்றாக நியாபகம் இருக்கின்றது . சில தாய்மார்கள் எனக்கு கண்ணுப்பட்டு விடும் என்று லுமிச்சை பழம் , கற்பூரம் கொண்டுவந்து எனக்கு சுத்தி போடுவாங்க,  நல்லா ஞாபகம் இருக்கு.சில தாய்மார்கள் என் பக்கத்திலே வந்து ஏம்பா..! இவ்வளோ நேரம் நிக்குற உனக்கு காலு வலிக்காதான்னு கேட்பாங்க அப்போ , நீங்க நலத்திட்ட உதவி பெற்றதும் உங்க முகத்தில் வருத சிரிப்பை பார்த்த கால் வலி பறந்து விடும்னு சொல்லுவேன் என்று முக.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பேசி வாக்கு சேகரித்தார்.

Categories

Tech |