ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். மேலும் இந்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி தினத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் @sooriofficial சகோ!!
எல்லா வளங்களும் நலங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் நீடூழி வாழ வாழ்த்துக்கள்.#HBDSoori #HappyBirthdaySoori pic.twitter.com/UyBuUeoGg8— Vetri Palanisamy (@vetrivisuals) August 27, 2021
இந்நிலையில் நேற்று நடிகர் சூரியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஒளிப்பதிவாளர் வெற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் சூரி, வெற்றியுடன் இயக்குனர் சிவாவும் இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.