Categories
உலக செய்திகள்

இந்திய உணவு பிடிக்கவே பிடிக்காது…. கட்டுரை எழுதிய எழுத்தாளர்…. லெப்ட் ரைட் வாங்கிய நெட்டிசன்கள்….!!

இந்திய உணவை பிடிக்காது என்று கட்டுரை எழுதிய அமெரிக்க எழுத்தாளரை இணையத்தளவாசிகள் அனைவரும் ட்விட்டரில் கடுமையாக பேசியுள்ளார்கள்.

அமெரிக்காவிலுள்ள பத்திரிக்கை நிறுவனமொன்றில் ஜூன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரே ஒரு வாசனை பொருட்களை மட்டுமே கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களை தனக்கு சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது என்று கட்டுரையாக எழுதியுள்ளார். மேலும் அந்த கட்டுரையை பிடிக்காத உணவு என்னும் தலைப்பின் கீழ் பத்திரிக்கையிலும் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த இந்திய நாட்டைச் சேர்ந்த சமையலாளர்களும், இணையதளவாசிகளும் ஜூனை மிகவும் கடுமையாக ட்விட்டரில் திட்டியுள்ளார்கள். இதனையடுத்து இந்திய உணவை கிண்டலடித்த ஜூனிற்கு சமையல் போட்டியில் நடுவராக பங்கேற்கும் பத்மா லட்சுமி என்பவர் சரியான பதிலடியை கொடுத்துள்ளார்.

அதாவது அமெரிக்காவை சேர்ந்த ஜுனுக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவு குறித்து கல்வி தேவை என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவருக்கு தி என் கையிலோ பீடியா ஸ்பைசஸ் அண்ட் ஹெர்ப்ஸ் என்னும் இந்திய புத்தகத்தை நான் பரிந்துரை செய்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |