தாசில்தாருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மேல கல்கண்டார் கோட்டை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாசுகி என்ற மனைவி உள்ளார். இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் பிரிவு தாசில்தாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வாசுகி தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது எதிர் வீட்டில் வசிக்கும் ரமேஷ் என்பவர் அவருடன் தகராறு செய்துள்ளார்.
மேலும் ரமேஷ் வாசுகிக்கும், அவரது கணவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வாசுகி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.