Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆற்றில் கலந்த கழிவுநீர்…. பொதுமக்கள் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

சாக்லேட் தொழிற்சாலையில் இருந்து ஆற்றில் விடப்படும் கழிவு நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெங்களாபுரம் அனேரி கிராமத்திற்கு செல்லும் வழியில் தனியார் சாக்லேட் தொழிற்சாலை அமைந்திருக்கிறது. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை அங்குள்ள பாம்பாற்றில் விடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் பாம்பாற்றில் இருக்கும் தண்ணீர் மாசு படிந்தும் மற்றும் நச்சுத் தன்மையாக மாறியுள்ளது. அதில் இருக்கும் மீன்கள், உயிரினங்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகிறது. இதனையடுத்து பாம்பாற்றில் கலக்கப்படும் கழிவு நீரால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதில் விவசாய நிலங்களும் பெரிதும் பாதிப்படைந்து வருகிறது. இதனால் சாக்லேட் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் பாம்பாற்றில் கலந்து விடுவதை தடுக்க கோரி 50-க்கும் அதிகமான பொதுமக்கள் மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து சமரசம் கூறிய காரணத்தினால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |