Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாலையோரம் பிரசவம்…. சாதூர்யமாக செயல்பட்ட உதவியாளர்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

பெண்ணிற்கு சாலையோரம் பிரசவம் பார்த்த மருத்துவர் உதவியாளரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி முல்லைநகர் குடியிருப்பு பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமாரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செஞ்சி கோட்டை ஆஞ்சநேயர் கோவில் செல்லும் பகுதியில் நிறைமாத கர்ப்பிணியான குமாரி ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென குமாரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அருகிலிருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் அய்யனார் சாலையோரம் வைத்து குமாரிக்கு  பிரசவம் பார்த்துள்ளார். இதில் குமாரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பிறகு குமாரியை சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |