பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் ஆசிரியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் அனைத்து ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டு கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் படி திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளது.
இதில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத அனைத்து வகையான ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளி கல்வி அலுவலர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக வட்டார கல்வி அலுவலகம், நாற்றம்பள்ளி, ஆலங்காயம், காந்திஜி ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கலெக்டர் அமர்குஷ்வாஹா கேட்டுக்கொண்டுள்ளார்.