Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”ப.சிதம்பரம் சிறையில் கைது” வச்சு செஞ்ச அமலாக்கத்துறை …!!

டெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி டெல்லியில் இருக்கக்கூடிய ப.சிதம்பரத்தின் இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.இதனையடுத்து தொடர்ச்சியாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது , குறிப்பாக 500க்கும் மேற்பட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. தற்போது ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாளையுடன் அவருடைய நீதிமன்ற காவல் நிறைவடைகிறது.இந்த வார இறுதிக்குள் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு தற்போது சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில்தான் தற்போது அமலாக்கத் துறையினர் ஐஎன்எக்ஸ் மீடியா  வழக்கில் சிதம்பரத்தை டெல்லி திகார் சிறையில் தற்போது கைது செய்துள்ளனர். நேற்றைய தினம் இது தொடர்பாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அதில் நீதிபதி  அஜய்குமார் குஹர் சிதம்பரத்தில் முழுமையாக விசாரணை நடத்தவும் , தேவைபட்டால் அவரை கைது செய்யவும் அனுமதி வழங்கினர் .இதனால்தான் இன்று காலை 8.30 மணிக்கு அமலாக்கத்துறையினர் 5 பேர் கொண்ட குழு அதிகாரிகள் வந்தனர். 3 அதிகாரிகள் ப.சிதம்பரத்திடம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் இறுதியில் தான் தற்போது அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரை இங்கிருந்து டெல்லியில் இருக்கக்கூடிய அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கே அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவிட்டு 24 மணி நேரத்தில் சிபிஐ சிறப்பு சிறப்பு நீதிமன்றத்திலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Categories

Tech |