நாடு முழுதும் கொரோனா சற்று குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அந்த வகையில் டெல்லியில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் செய்தார்களை சந்தித்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பள்ளிகளில்தான் தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் ரேஷன் பொருட்கள் விநியோகம் தற்போது நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக 4 வகுப்புகளில் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர உள்ளதால் இடம் பெரிய பிரச்சினையாக இருக்காது. மாணவர்கள் அனுமதிக்கப்படும் இடங்களில் அல்லாமல் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு தனியாக இடம் ஒதுக்கப்படும். பள்ளிகள் திறப்பு விழாவில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். பள்ளிகளுக்கு வரவிரும்பாத மாணவர்களை கட்டாயப்படுத்த படமாட்டாது. அவர்கள் தொடர்ந்து இணையவெளியில் படிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.