Categories
தேசிய செய்திகள்

செப்-25 நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம்…. விவசாய சங்கங்கள் அறிவிப்பு…!!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 10 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் அவர்களுக்கு சாதகமாக எந்த ஒரு நடவடிக்கையையும் மத்திய அரசு கொண்டு வரவில்லை. மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி “பாரத் பந்த்” என்ற பெயரில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. கடந்த வருடமும் இதே நாளில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. அதற்கு அளித்த முழு ஆதரவை அனைத்து தரப்பினரும் இந்த போராட்டத்தில் அளிக்க வேண்டும் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா  அமைப்பு தெரிவித்துள்ளது.

Categories

Tech |