கடைகளில் போதைப் பொருட்களை விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சாராயம், குட்கா மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொன்னேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அங்கு உள்ள ஒரு மளிகை கடைக்கு வந்தவர் காவல்துறையினரை பார்த்ததும் கையில் வைத்திருந்த பையை மறைத்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.
இதனை பார்த்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை செய்த போது அவர் திருப்பதி என்பதும் கடைக்கு குட்கா பொருட்களை விற்பனை செய்ய வந்ததும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 200 ரூபாய் மதிப்புடைய குட்கா மற்றும் 300 ஹான்ஸ் பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.