மீனம் ராசி அன்பர்களே.! அதிகப்படியான சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும்.
இன்றைய நாள் தடைகள் உங்களுக்கு விலகி செல்லும். தனவரவு கண்டிப்பாக ஏற்படும். தந்தைவழி உறவுகள் மூலம் ஏற்பட்ட விரிசல்கள் மறையும். அவரிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். முன்னோர் சொத்துக்கள் கையில் வருவதற்கான சூழல் இருக்கும். எதையும் சிறப்பாக செய்யக்கூடிய ஆற்றல் இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். கனவுகள் நிறைவேறும். கனவுகளால் ஏற்பட்ட தொல்லைகள் சரியாகும். பிள்ளைகளுடன் பொறுப்பாக இருந்து அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதனை செய்து கொடுப்பீர்கள். கல்விக்கான செலவு இருக்கும். சேமிப்பு பணம் கரையும். மனைவிவழியில் உதவிகள் இருக்கும். அயல்நாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். தந்தைவழி சொத்துக்களை கேட்டு வாங்கக்கூடிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கற்பனை திறன் அதிகமாக இருக்கும். அதிகப்படியான சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும்.
ஓய்வில்லாமல் இருக்கும். உடல் உழைப்பு அதிகமாக இருக்கும். அதனால் கொஞ்சம் சோர்வாக இருப்பீர்கள். அக்கம்பக்கத்தினர் உங்கள் மீது அன்பு கொள்வார்கள். காதல் உங்களுக்கு வெற்றிகரமாக செல்லும். நிம்மதியை கொடுக்கும். மன அமைதியைத் தரும். பிரச்சினையாக உள்ள காதலில் கூட பிரச்சனைகள் தீரும். மாணவர்களுக்கு தேவைகள் அதிகமாக இருக்கும். பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். மாணவர்கள் விளையாடும் போது மூர்க்கத்தனமாக விளையாட வேண்டாம். பக்குவமாக விளையாட வேண்டும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் வெளிர் நீலம்