பெற்றோர் திட்டிய காரணத்தினால் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பார்சம்பேட்டை பஜனை கோவில் தெருவில் ஜெய்ஷங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார். இவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லுமாறு பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த கார்த்திகேயன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜெய்சங்கர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கார்த்திகையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.