காலைப் நேரத்தில் இருந்த வெப்பநிலை மாறி திடீரென கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல சுழற்சி காரணத்தினால் தமிழகத்தில் திண்டுக்கல், விழுப்புரம், கடலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து பல இடங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கிய நிலையில் இம்மாவட்டத்தில் சாரலாக மிதமான மழை பெய்துள்ளது. ஆனால் பண்ருட்டி, வேப்பூர் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் ஆகிய ஒரு சில பகுதிகளில் தீவிரமாக கனமழை பெய்துள்ளது. அதன்பின் வறண்ட வானிலை நிலவியதால் பகல் நேரத்திலும் சூரியனின் ஆதிக்கம் அதிகமாக இருந்துள்ளது. அதனால் துறைமுகம் போன்ற பகுதிகளில் மீனவர்கள் கருவாடு போன்றவைகளை காய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது திடீரென மாலை 4 மணி அளவில் வானில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இடியுடன் கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் அவை வடியாமல் தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றுள்ளது. இதனை தொடர்ந்து குறைந்தபட்சமாக கடலூரில் 0.4 மில்லி மீட்டர் மழை மற்றும் அதிகபட்சமாக வேப்பூரில் 45 மில்லி லிட்டர் மழை பதிவாகி இருக்கிறது.