மேற்கு வங்கத்தின் முர்ஷிதாத் பகுதியில் பாஜக பிரமுகர் பந்து பிரகாஷ் மற்றும் அவரது மனைவி , மகன் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அக்டோபர் எட்டாம் தேதி நண்பகல் வேளையில் துர்கா பூஜையின் போது கதவு தட்டப்படும் ஓசை கேட்டு வந்த பிரகாஷ் கதவை திறந்த உடன் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அவரையும் அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் ஆறு வயது மகனையும் அடுத்தடுத்து கொன்று குவித்தனர். இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் பெஹார என்பவரை கைது செய்தனர்.
கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பிரகாஷ் மற்றும் அவரது மனைவி குழந்தையை கொலை செய்ததும் ஐந்து நிமிடங்களுக்குள் இந்த கொலை நடந்ததும் விசாரணையில் தெரியவந்தது. சம்பவத்தன்று பிரகாஷ் வீட்டில் இருந்து பெஹாரா ஓடுவதையும் 3 பேர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த பால்காரர் ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். பிரமுகரின் கொலை வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் அரசியல் விரோதம் காரணமாக கூறப்பட்ட நிலையில் பணத்திற்காக இந்தக் கொலைகள் நடைபெற்று இருப்பதாக புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.