தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருவதால் பல்வேறு புதிய தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் செப்டம்பர்-1 ஆம் தேதி முதல் கல்லூரிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால்கல்லூரிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாணவர்களே தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் செப்டம்பர்-1 ஆம் தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் மாவட்ட சுகாதார இயக்குனர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.