இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இது அனைத்தும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார் இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலை வந்துவிட்டது. ஆதாரை பான், பிஎப் கணக்கு ஆகியவற்றோடு இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் கொரோனா பரவலை கருத்தில்கொண்டு இதற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டது. ஆதார்-பான் இணைக்க செப்டம்பர் 30 கடைசி நாள் ஆகும். அதே போன்று ஆதார் -பிஎப் இணைப்பு ஆகஸ்ட் 31 கடைசி நாள் ஆகும்.
இதற்கான கால அவகாசம் முடிவடைய இன்னும் கொஞ்ச நாள் மட்டுமே இருக்கும் நிலையில் ஒரு சிலர் இன்னும் இணைக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஆதார்- பான் இணைப்பில் பிரச்சினை இருப்பதாக வாடிக்கையாளர்கள் தரப்பில் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. மேலும் சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பான தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து UIDAI விளக்கமளித்துள்ளது. அதில், ஆதார்-பிஎப், ஆதார்-பான் இணைப்பில் தொழில்நுட்ப ரீதியாக எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. ஆதார் தொடர்பான சேவைகள் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்கள் ஆதாரமில்லாதவை எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.