இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதுகுறித்து கேப்டன் விராட் கோலி கூறும்போது, “இந்த டெஸ்ட் போட்டியில் நாங்கள் முடிந்தவரை போராடினோம். 2-வது இன்னிங்சில் மீண்டு வருவதற்கு எங்களுக்கு சில பார்ட்னர்ஷிப்கள் அமைந்தது .ஆனால் நாங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை .எங்களுடைய பேட்டிங் சிறப்பாக இருந்தாலும், இங்கிலாந்து பவுலர்களின் அதிக அழுத்தத்தால் எங்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் நாங்கள் பேட்டிங்கில் சொதப்பியது அதிர்ச்சியாக இருந்தது .
இந்த பிட்ச்சில் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் .ஆனால் நாங்கள் அதை தவற விட்டோம். பவுலிங்கிலும் நாங்கள் சிறப்பாக செய்யவில்லை “என்று அவர் கூறினார். மேலும் பேசிய அவர் “லார்ட்ஸில் டெஸ்டில் தோல்விக்குப் பின்னர் இங்கிலாந்து அணி நன்றாக மீண்டு வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த வெற்றி தகுதியானது தான். எப்போதும் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக பேட்டிங் செய்தால் தான், இதன்பிறகு களம் இறங்குபவர்கள் நன்றாக விளையாட முடியும் அதை செய்ய தவறிவிட்டோம். எங்கள் அணி கண்டிப்பாக இந்த தோல்வியில் இருந்து மீண்டு வரும். முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் காட்டிய திறமையை மீண்டும் காட்டுவோம் என்று அவர் கூறினார்.