நேற்று நடைபெற்ற சட்டப் பேரவையில் கால்நடைத்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: கால்நடைகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ₹7.76 கோடியில் 7,760 கால்நடை சுகாதார முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். மேலும் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோர் ஆக்குவதற்காக ரூபாய் 75.63 கோடியில் 38,880 பெண்களுக்கு தலா 5 செம்பரி ஆடுகள், வெள்ளாடுகள் 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் ரூபாய் 54 கோடியில் நபார்டு வங்கி உதவியுடன் 85 கால்நடை மருத்துவ நிலையங்கள் புதியதாக, புதிய கட்டிடங்களுடன் உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் ரூபாய் 9.40 கோடியில் நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை மற்றும் கோழி குஞ்சு பொரிப்பகம் ஆகியவற்றை நெல்லை மாவட்டத்தில் கால்நடை பண்ணையில் நிறுவப்படும் எனவும் கூறியுள்ளார்