இங்கிலாந்தின் தலைநகரில் நடந்த கொடூர இரட்டைக் கொலையில் காவல்துறை அதிகாரிகள் சந்தேகித்த நபரை அதிரடியாக கைது செய்துள்ளார்கள்.
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் வசித்து வந்த 59 வயது மதிக்கத்தக்க ஆணை மர்ம நபர் கத்தியை கொண்டு கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அதேபோல் அதே பகுதியில் வசித்து வந்த 45 வயதுடைய பெண் ஒருவரையும் மர்மநபர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இதனை விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள் ஒரே பாணியில் செய்யப்பட்ட இந்த இரட்டை கொலைகளை 49 வயதுடைய leapeacock என்பவர்தான் செய்திருக்கலாம் என்று சந்தேகப் பட்டுள்ளார்கள். அதன்பின்பு leapeacock கின் படத்தை வெளியிட்டு அவர் தொடர்பான தகவலை காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தால் சுமார் 20,000 பவுண்டுகள் சன்மானம் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறான சூழ்நிலையில் இந்த இரட்டை கொலைகளை இவர்தான் செய்திருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் சந்தேகப்பட்ட leapeacock கை அவர்கள் அதிரடியாக கைது செய்துள்ளார்கள்.