Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் 3 மீனவ கிராமங்களில்…. இன்று 144 தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!

புதுச்சேரி  மாநிலம் நல்லவாடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த வீராம்பட்டினம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த விவகாரம் முற்றி இரு தரப்பினரும் ஆயுதங்களை வைத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இந்த சம்பவத்தால் இரு மீனவ கிராமங்களுக்கும் இடையே பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நல்லவாடு, வீராம்பட்டினம், வம்பாகீரப்பாளையம் ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .இந்த கிராமத்தில் வசிக்கும் 600 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |