ஜேர்மனி அரசு காபூலில் வெடிகுண்டு வெடிப்பதற்கு முன்பே ஆப்கானிஸ்தானில் உள்ள தனது தூதரகத்தை மூடி மக்களை மீட்கும் பணியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி கண்ணிமைக்கும் நேரத்தில் அந்நாட்டை கைப்பற்றி தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் இன்னும் ஜேர்மனி நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் உள்ளூர் அலுவலர்கள் உட்பட அனைவரும் தலீபான்களிடம் சிக்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் ஜேர்மனி அரசு ஆப்கானிஸ்தானில் உள்ள தனது தூதரகங்கள் அடைத்து அங்கிருந்து மக்களை மீட்கும் பணியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து ஜேர்மனி அரசு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியதாவது “ஆப்கானிஸ்தானில் தலீபான்களிடம் சிக்கியிருக்கும் ஜேர்மனி நாட்டை சேர்ந்த மக்கள் தங்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யும்மாறு கேட்டுக்கொண்டுள்ளது. இருப்பினும் ஜேர்மன் வெளியுறவு அலுவலகம் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருப்போரை மீட்டு வருவதற்காக மீட்பு விமானங்களை ஏற்பாடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது” என தகவல் தெரிவித்துள்ளது.
அதாவது ஜேர்மனி அரசு கடந்த 26ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் வெடிகுண்டு தாக்குதல் நடப்படுவதற்கு முன்பே மீட்புப் பணியை முடித்துள்ளது. இந்நிலையில் ஜேர்மன் நாட்டு சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் கூறியதாவது “ஆப்கானிஸ்தானில் மாட்டியிருக்கும் மக்களை தங்களால் முடிந்த அளவு எங்கள் அரசு வெளியேற்றிக் கொண்டே தான் இருக்கும். ஆனால் அவ்வாறு மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்காவின் உதவி எங்களுக்கு தேவைப்படுகிறது” என கூறியுள்ளார்.