ஈரானில், தற்போது கொரோனா தொற்று குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில், கொரோனா தொற்று பாதிப்பு பட்டியலில் 10-ஆம் இடத்தில் ஈரான் இருக்கிறது. மேலும், ஈரானில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 40,000-த்திற்கும் அதிகமாக இருந்தது. எனினும், தற்போது அங்கு கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், தற்போது வரை 41,17, 098 நபர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள். 6, 72,449 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக ஈரான் சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.