சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் முக ஸ்டாலின், இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும். முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பணக்கொடை வழங்கப்படுகிறது. இந்த பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும். இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும்.
இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது, சொந்த நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற உறுப்பினர், இலங்கை தமிழருக்கு நாம் எப்போதும் உறுதுணையாக இருப்போம். இனி இலங்கை தமிழர்களுக்கான முகாம்கள் என்று அழைக்காமல், மறுவாழ்வு முகாம்கள் என அழைப்போம். அவர்கள் அகதிகள் இல்லை. அவர்களுக்கு நாம் இருக்கிறோம் என்று தெரிவித்தார். இந்நிலையில் இலங்கை தமிழர் அகதிகள் முகாம், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.