Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நர்சிங் மாணவி தனக்கு தானே விஷ ஊசி போட்டு தற்கொலை….. காரணம் என்ன..? போலீசார் தீவிர விசாரணை…!!

சென்னையில் நர்சிங்  மாணவி தனக்கு தானே விஷ ஊசி போட்டுக்கொண்டு  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவெற்றியூர் பகுதியை அடுத்த அண்ணாமலை நகர் ராஜுவ்காந்தி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மகள் நந்தினி திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரம் வீட்டில் தனது அறையில் நந்தினி உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது நீண்ட நேரம் உறங்குகிறாள் என்று அவரது பெற்றோர் அவரை எழுப்ப முயற்சித்தனர். அப்பொழுது வாயில் முறை தள்ளியவாறு மயங்கிய நிலையில் கிடந்தார் நந்தினி. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

Image result for விஷ ஊசி

அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கடந்த சில தினங்களாகவே நந்தினி சோகமாக இருந்ததும், வீட்டில் வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை ஊசி மூலம் தனது உடலில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டதும்  தெரிய வந்துள்ளது. தற்கொலைக்கு முன் அவர் தனது பெற்றோர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும் எனது உடலை நான் வளர்ந்த சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் குடும்ப சூழ்நிலையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் தற்பொழுது காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |