பிரான்சில் ரொட்டியில் கண்ணாடி துண்டுகள் இருப்பதாக கூறி அவற்றை பல்பொருள் அங்காடி ஒன்று திரும்ப பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள இன்டெர்மர்ச்சே எனும் பல்பொருள் அங்காடி ஒன்றில் வில்லை போடப்பட்ட ரொட்டி விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அந்த பல்பொருள் அங்காடியில் விற்பனை செய்யப்படும் ரொட்டிகளில் கண்ணாடி துண்டுகள் இருக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும் அந்த ரொட்டிகளை தூர எறிந்துவிடுங்கள், அவற்றை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதோடுமட்டுமில்லாமல் அந்த ரொட்டிகளை திருப்பி அங்காடியிலேயே கொடுத்தால் அவற்றுக்கான கட்டணம் திருப்பி கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக Chabrior பிராண்ட் ரொட்டிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.