Categories
உலக செய்திகள்

மீட்பு நடவடிக்கைகளை முடித்து கொள்கிறோம்..! பிரபல நாடு அதிரடி அறிவிப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

பிரித்தானிய அரசு ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் நடவடிக்கைகளை முடித்துக் கொண்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம் ஐ.எஸ். தீவிரவாதிகள் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களை மீட்பதற்காக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகள் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளும் சீர்குலைந்துள்ளது. இதையடுத்து பிரித்தானியா மீட்பு நடவடிக்கையை முடித்துக் கொள்வதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் பிரித்தானிய பாதுகாப்பு செயலர் பென் வாலஸ் காபூல் விமான நிலையத்திற்குள் கடைசியாக வந்து சேர்ந்த ஆயிரம் நபர்களை மட்டும் மீட்டு வர இருப்பதாக உறுதி அளித்துள்ளார். அதேசமயம் வெளிநாட்டு படைகளால் மீட்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் காபூல் விமானநிலையத்தில் காத்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஆப்கான் மக்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஆப்கானிஸ்தானின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து காபூல் விமான நிலையத்திற்கு வந்து சேர இயலாமல் சிக்கி தவிக்கும் பிரித்தானியர்களையும் தங்களால் மீட்க முடியவில்லை என்று கூறியுள்ளார். அதன்படி பிரித்தானியர்கள் சுமார் 150 பேர் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த எண்ணிக்கையானது மாறுபட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அந்த நாட்டில் பணியாற்றும் ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களும் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அதேசமயம் 8000 ஆப்கன் மக்கள் உட்பட மொத்தம் 13 ஆயிரம் பேர் கடந்த இரண்டு வாரத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பென் வாலஸ் தெரிவித்துள்ளார். அதில் 800 முதல் 1,100 ஆப்கன் மக்களுக்கு குடியுரிமை பிரித்தானியாவில் வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |