Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு குற்ற வழக்குகள்…. ரவுடி மீது குண்டர் சட்டம்…. மாவட்ட கலெக்டர் உத்தரவு….!!

தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் குற்றவாளி ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி வடக்கு பகுதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போடுவதற்காக பங்க்குக்கு சென்றுள்ளார். அப்போது பெட்ரோல் பங்க் அருகில் சென்ற போது அங்கு வந்த 2 நபர்கள் வழிமறித்து அவரது சட்டைப் பாக்கெட்டிலிருந்து 1௦௦௦ ரூபாயை பறித்து கொண்டு சென்றுள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் மணிமாறன் மற்றும் வீரமணி ஆகிய 2 பேரும் பணத்தை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட வீரமணி என்பவர் மீது காவல் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் வழிப்பறி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 8 வழக்குகள் அவர் மீது உள்ளது.

அதனால் இவரின் தொடர்ச்சியான குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை சூப்பிரண்டு சக்திகணேசன் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். அந்த பரிந்துரையின் படி கலெக்டர் பாலசுப்பிரமணியம் குற்றவாளியான வீரமணியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரமணியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை சிறை அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |