Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெளியே நின்று கொண்டிருந்த பெண்…. தகராறு செய்த வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சொத்து பிரச்சனையால் ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகநாயகி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சின்ன துரைக்கும் கவுண்டன்புதூர் பகுதியில் வசிக்கும் துரைசாமி மற்றும் கதிர்வேல் ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் கதிர்வேலுவும், துரைசாமியும் இணைந்து அப்பகுதியில் நின்று கொண்டிருந்த லோகநாயகியை சரமாரியாக தாக்கியதோடு, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதுகுறித்து லோகநாயகி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கதிர்வேல் மற்றும் துரைசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |