சாலையோரம் சுற்றி திரியும் தெரு நாய்களின் தொந்தரவால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான தெரு நாய்கள் சுற்றித் திரிகிறது. இந்த நாய்கள் சாலையோரம் கொட்டப்படும் உணவு மற்றும் இறைச்சி கழிவுகளை தின்று அங்கும் இங்கும் உலா வருகிறது. மேலும் தெரு நாய்கள் பணி முடிந்து வீடு திரும்பும் நபர்களை விரட்டி கடிக்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் தெருநாயால் 500 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தெரு நாய்களுக்கான கருத்தடை மையங்கள் செயல்படாமல் இருப்பதால் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே செல்கிறது. இவை சாலையில் செல்லும் மக்களை துரத்தி கடிக்கின்றன. எனவே மாநகராட்சி நிர்வாகம் தெரு நாய்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.