கடந்த 15ஆம் தேதி முதல் ஆப்கானிஸ்தான் முழுமையாக தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தங்களை உயிரை காப்பாற்றுவதற்காக எப்படியாவது விமானங்களில் வெளியேறி வருகின்றனர். அங்கிருந்து தற்போது வரை ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேரை அமெரிக்கா பத்திரமாக மீட்டு கொண்டு வந்துள்ளது. இதனையடுத்து தற்போது இறுதிகட்ட மீட்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அந்த சமயத்தில் தான் கடந்த வியாழக்கிழமை அன்று ஆப்கான் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தது.
இதில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 100 பேர் பலியாகினர். இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விடமாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்த நிலையில் நேற்று ட்ரோன் தாக்குதலை அமெரிக்கா நடத்தியது. இதில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் டாப் கமாண்டர் எனப்படும் பெரும்புள்ளிகள் பலியானதாக அமெரிக்கா தெரிவித்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர், “ஆப்கானிஸ்தானில் இன்னும் நிலைமை மோசமாக உள்ளது. காபூல் விமான நிலையத்தில் பயங்கர தாக்குதலுக்கு அதிகமாக வாய்ப்பிருக்கிறது. அமெரிக்க இராணுவம் அங்கு இன்னும் 24 மணி நேரம் முதல் 36 மணி நேரத்திற்கு மிகப்பெரிய தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரித்து உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.